வர்ற ஜனவரில இருந்து..இந்த கிரெடிட்/டெபிட் கார்டுகள் செல்லாது!

Home > தமிழ் news
By |
வர்ற ஜனவரில இருந்து..இந்த கிரெடிட்/டெபிட் கார்டுகள் செல்லாது!

 வருகின்ற 2019-ம் ஆண்டு முதல் EVM(மொபைல் சிம் கார்டைப் போன்று இருக்கும் இந்த EMV சிப் டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் முன்புறம் இருக்கும்) இல்லாத கிரெடிட்/டெபிட் கார்டுகள் செல்லாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி தற்போது இருக்கும் மற்ற அனைத்து டெபிட் மற்றும் கார்டுகளையும் இந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த EMV சிப் பொறித்த கார்டுகளாக மாற்றியாக வேண்டுமாம். வங்கிகள் இதைச் சரிவர செய்துமுடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.பல்வேறு மோசடிகள் நடப்பதால் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

 

இது தொடர்பாக கூடுதல் நேரம் கேட்டு ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் அனைத்தும் முறையிட்டுள்ளன. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே இதனை வலியுறுத்தி வருவதால் ரிசர்வ் வங்கி இதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

 

எனவே வங்கிகளின் உத்தரவுகளுக்கு காத்திராமல் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகளில் இந்த சிப் இல்லையென்றால், உடனடியாக புது கார்டுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.

RESERVEBANK, CREDITCARD