இடைத் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணம்.. ‘மினி சட்டமன்ற தேர்தல்’ கேட்கும் ஸ்டாலின்!

Home > தமிழ் news
By |
இடைத் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணம்.. ‘மினி சட்டமன்ற தேர்தல்’ கேட்கும் ஸ்டாலின்!

திருவாரூரில் நடத்த திட்டமிருந்த இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி, மாநிலக் கட்சிகள் மற்றும் மத்திய கட்சிகளின் அரசியல் பிரபலங்களின் தரப்பில் இருந்து, ஆதரவுகளும் கண்டனங்களும் வந்தவண்ணம் உள்ளன.


இதனிடையே, தமிழ்நாட்டில் அண்மையில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறாததாலும், கஷ்டத்தில் இருக்கும் அம்மக்களின் மனநிலையை கருத்தில்கொண்டு, தற்போது இடைத் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் இத்தகைய முடிவினை எடுத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

அதோடு கஜா புயலால் ஏற்பட்டது சாதாரண பாதிப்பில்லை என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.எனவே திருவாரூர் தொகுதியுடன், மேலும் உள்ள் 19 தொகுதிகளுக்கும் சேர்த்து ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இப்போதில்லை என்றும் மாவட்ட தேர்தல்  கூறியுள்ளார்.

 

இதுபற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,‘அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்பார்கள். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 'மினி சட்டமன்றத் தேர்தல்' என்று சொல்லுமளவுக்கு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். 

DMK, TNGOVT, THIRUVARURELECTION, BY-ELECTION, CYCLONEGAJA, KARUNANITHI