'37 வயதா? இல்லை 47 வயதா? என்பது முக்கியமில்லை'.. கம்பீர் ஆவேசம்!
Home > தமிழ் newsஉங்களுக்கு 37 வயதாகிறதா? இல்லை 47 வயதாகிறதா? என்பது முக்கியம் இல்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,'' பிரித்வி ஷாவை, வீரேந்திர ஷேவாக் உடன் ஒப்பிடுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்.ஷேவாக் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர். அனுபவம் மிக்கவர்.
அவருடன் பிரித்வி ஷாவை ஒப்பிடுவது நியாயமில்லை.உண்மையில், யாரையும், யாருடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது, பார்க்கவும் கூடாது. பிரித்வி ஷா கிரிக்கெட்டில் இப்போதுதான் தனது வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார்.இன்னும் அவர் நீண்ட காலம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பிரித்வி ஷாவுக்கென தனித்துவம் இருக்கிறது, சேவாக்குக்கு தனித்துவம் இருக்கிறது.
ஒருநாள் போட்டியில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட் வருவதற்கு இது சரியான நேரமா என்றால், இது சரியான நேரமும் இல்லை. தவறான நேரமும் இல்லை. உங்களுக்கு 36,37 அல்லது 47 வயதா? என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்தால் உங்களுக்கு உரிய இடம் இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.