உலகின் வாழ்வதற்கேற்ற இடங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 நகரங்கள்!

Home > தமிழ் news
By |
உலகின் வாழ்வதற்கேற்ற இடங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 நகரங்கள்!

உலகம் முழுவதும் வெப்பமயமாதல், பெருகி வரும் நகர்ப்புற கலாச்சாரம் முதலானவற்றால் பலர் ஓரிடத்தில் தங்கியும், பலர் புலம் பெயர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். சரியனா சீதோஷ்ண நிலை, நிலையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய வாழ்வாதாரங்கள், பேரிடரால் பாதிக்கப்படாத வாழ்வியல் சூழல் முதலானவைதான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டு தரத்தையும் தீர்மானிக்கிறது.

 

இவற்றால் வரும் சிக்கல்களை எதிர்கொண்டு ஓரிடத்திலேயே நிலையாக வாழும் மக்கல் ஒருபுறம் என்றால், உலகமயமாதல், பன்மயமாதல், நகரமயமாதல் போன்ற நவீன கொள்கைகளுக்கு எதிராக பழங்குடி இனத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை இன்னும் பல்வேறு அரசுகள் நவீன வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளச் சொல்லியும் அறிவுறுத்தி வருகின்றன.  அல்லோபதி மருத்துவம், பெட்ரோல் வாசனை, ஜங்க்  உணவு கலாச்சாரங்களுக்கு பழக்கப்படாத அவர்களின் வாழ்க்கை முறையை விட்டு பலர் நகரவும், நகர்த்தப்படவும் செய்துள்ளனர்.

 

எனினும் நவீன கால பாலியல் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பொருளாதார, வாழ்வாதார பாதுகாப்புகள், அடிப்படை உணவு, உடை, இருப்பிட, வருமான விகிதம், மேம்பட்ட சுற்றுச் சூழல், எளிதில் கிடைக்கும் அறிவியல் பயன்பாடுகள் முதலானவற்றின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் என்கிற பட்டியல் ஒன்று தயாராகியுள்ளது. லண்டனின் Economist Intelligence Unit வெளியிட்ட இப்பட்டியலில் 112வது இடத்தில் டெல்லியும், 117வது இடத்தில் மும்பையும் உள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா இதில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த தரவரிசை ரிப்போர்ட்படி, தெற்காசிய நாடுகளின் சிறந்த வாழ்வியலுக்கு உகந்த நகரங்களில் இந்தியாவை சேர்ந்த நகரங்கள் இடம் பிடித்திருந்தாலும், 112, 117வது இடங்கள் பெற்று இந்தியா பின்தங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது. 

WORLDMOSTLIVEABLECITY, INDIA, DELHI, MUMBAI, VIENNA, LONDON, ECONOMIST INTELLIGENCE UNIT, AUSTRIA