‘அது அவசியமில்லை.. அதை பற்றி பேசி பலனும் இல்லை’: கோலி சொல்லும் சீக்ரெட்!
Home > தமிழ் newsபெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி வீரர்களில் 30 ரன்களுக்கு மேல் யாரும் எடுக்காத நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு பெர்த் மைதானத்தில் விளையாண்ட ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.
இந்நிலையில் போட்டியின் முடிவில் பேட்டி அளித்த விராட் கோலி, ‘ஒரு குழுவாக விளையாண்டோம். எனினும் சிறப்பாக விளையாண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுக்க அனுமதித்ததுதான் இந்தியாவின் தோல்விக்கும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கும் காரணமாகிவிட்டது. ஆனால் இந்த வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலிய அணியில், ஸ்பின் பௌலரான நாதன் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்டுகள் எடுத்ததுதான் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
முன்னதாக நாங்கள் பிட்சை பார்த்துவிட்டு, ஸ்பின் பௌலர் அவசியமில்லை என முடிவெடுத்து ஜடேஜா போன்றோரை எடுக்கவில்லை. ஆனாலும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி சிறப்பான முறையில் பந்துவீசியது. எதிர்காலத்தில் இதுபோன்ற பந்துவீச்சாளர்களால் அணி வலுவான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும்’ என்றார்.
பிறகு கோலியிடம் முதல் இன்னிங்ஸில் அடித்த, சதம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நாம் என்னதான் சதம் அடித்தாலும், அதிலிருந்து அணிக்கு வெற்றியை ஈட்டித் தர முடியாதபோது, அவை நம் எதிர்பார்ப்பு இலக்கான வெற்றியை அடைய உதவாதபோது அந்த சாதனைகளை முன்னிலைப் படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்த சாதனையைப் பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. அதனைப் பற்றி பேசுவதில் பலன் இருப்பதாகவும் தோன்றவில்லை. ஆக, அடுத்த டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தவே நான் முனைகிறேன்’ என்று கூறினார்.