"மாயமான விமானத்தின் பைலட் ஒரு இந்தியர்"....சோகத்தில் விமானி குடும்பம்!
Home > தமிழ் newsஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு,நேற்று காலை இந்தோனேஷியாவை சேர்ந்த பயணிகள் விமானம் சென்றது.ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயேவிமானம் மாயமானது.லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விமானத்துக்கு டெல்லியைச் சேர்ந்த விமானி பாய்வே சுனேஜா தான் பைலட் என்று தெரியவந்துள்ளது.தற்போது இந்த தகவலை அறிந்த விமானியின் குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.6 பேர் இருந்த விமானக் குழுவுக்கு, கேப்டன் சுனேஜா தான் தலைமை வகித்தார். அவருக்கு இதுவரை 6,000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த லியான் ஏர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர்ந்தார்.
தற்போது ஜாவா தீவுகளுக்கு அருகே விமானத்தின் பாகங்கள் கிடைத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.மீட்புப் பணி அதிகாரி முகமது யவுகி, விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர தேடுதலில் மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் விமானம் விமான விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது என இந்தோனேசிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.