‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Home > தமிழ் news
By |

10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இப்போது எடுக்கப்படும் புகைப்படத்தையும் இணைத்து #10YearChallenge என்கிற ஹேஷ்டேகின் கீழ் சமூக வலைதளங்களில் இந்த புதியவகை சேலஞ்ச்சை தற்போது, சமூக வலைதளங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்!

திரை பிரபலங்கள், அரசியல், விளையாட்டு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர்  இந்த 10 வருட சேலஞ்சினை பலவகையிலும் பதிவிட்டு வருகின்றனர். பத்து வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளோடும், வாழ்க்கையின் பலதரப்பட்ட சூழல்களுடனும் இன்றைய சூழ்நிலையை ஒப்பிட்டு பதிவு செய்யப்படும் இந்த சேலஞ்சில் ஒரு புகைப்படமே நிறைய பேசிவிடுகிறது என்பதால் இந்த சேலஞ்ச் பெருமளவில் வைரலாகி வருகிறது.

இதே சேலஞ்சை இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா புதுவிதமாக பதிவிட்டுள்ளது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.  மிகவும் ஆழமான அந்த பதிவில், 10 வருடத்துக்கு முன்பு, 2009-ஆம் ஆண்டு பவளப்பாறைகள் செழிப்புடன் இருந்ததாகவும் பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் இயற்கை நிலத்திலும் நீர்வளம் மீதும் உண்டான பெருமாற்றங்கள் காரணமாக தற்போது ஆழியில் இருக்கும் பவளப்பாறைகள் கலையிழந்து இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் மீன்கள், கடல்வாழ் உயிரிகள் என்று மாசுபடாமல் இருந்த கடலை மாசுபடுத்தியதற்காக நாம் அனைவரும் கவலைப்படவேண்டிய #10YearChallenge இது ஒன்று மட்டும்தான் என்று பதிவிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த நெஞ்சை உருக்கும் அக்கறை மிகுந்த பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது.

ROHITSHARMA, CRICKET, 10YEARCHALLENGE, TWEET, VIRAL, SOCIALMEDIA, TRENDING