‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா?’:ஸ்டாலின்!

Home > தமிழ் news
By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்து திருமண முறையான வைதீக முறை பற்றி ஒரு திருமண விழாவில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா?’:ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் பேசியவை:

வைதீக திருமணம் எப்படி நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். மணமகன் மணமகள் இருவரையும் தரையில் அல்லது பலகையில் உட்கார வைத்து அவர்களின் அருகில் இருக்கும் புரோகிதர் ஒருவர் மந்திரத்தை சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கத் தொடங்குவார்.

அதையும் எப்படி நடத்தி வைப்பார் என்றால், அந்த மணமக்களுக்கு இடையில் நெருப்பை மூட்டி, அதில் இருந்து உருவாகும் புகையினால் மணமக்கள் மற்றும் திருமணத்தை பார்க்க வந்தவர்களின் கண்களில் எல்லாம் கண்ணீரை வரவழைத்து பெரும் சோகத்தில் அந்த திருமணத்தை நடத்துவார்.

அதன் பின் அந்த புரோகிதர் சில மந்திரங்களைச் சொல்லுவார். கின்னரரை கூப்பிடுவார், கெருடர்களை கூப்பிடுவார். முப்பத்து முப்பத்தெட்டுக்கோடி தேவர்களை கூப்பிடுவார், இஷ்ட அவதாரங்களை கூப்பிடுவார், சில எக்ஸ்ட்ரா அவதாரங்களையும் கூப்பிடுவார்.

ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று மணமக்களுக்கும் தெரியாது. திருமணத்துக்கு சென்றவர்களுக்கும் தெரியாது. ஒருவேளை ஐயரை கூப்பிட்டு தனியாக கேட்டால் அவருக்கும் தெரியாது. ஏன் என்றால் அந்த மந்திரத்தின் உள்பொருள் தெரிந்தால் உடம்பெல்லாம் நடுங்கும். அவ்வளவு கேவளமான வகையில் அந்த மந்திரங்கள் இருக்கும்.

என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

MKSTALIN, DMK, MARRIAGE, PRIEST