பிக்பாஸ் 2-வது சீசன் வருகின்ற ஜூன் 17-ம் தேதி தொடங்கவுள்ளது.முதல் சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 2-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதனால் இந்த சீசனைக்காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகததால், அந்த 15 பேர் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது.

 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளே செல்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பவர்ஸ்டார் நமக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள ஜெயில் எனக்காகத்தான் என நினைக்கிறேன். ஜெயிலை ஜெயிலாகப் பார்க்காதீர்கள்.அந்த இடம் நமக்கு நல்ல மனநிலையைக் கொடுக்கும்,'' என்றார்.

 

அந்த வீட்டுக்குள் செல்வது கஷ்டமாக இருக்காதா? என்ற கேள்விக்கு வாழ்கையில் எதுவும் கடினம் இல்லை. நீங்கள் கஷ்டமாக நினைத்தால் கஷ்டம். ஈசியாக நினைத்தால் ஈசி,'' என்றார்.

BY MANJULA | JUN 15, 2018 2:20 PM #BIGGBOSS2 #POWERSTAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS