ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. துப்பாக்கி சூட்டினைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையினை மூடிடக்கோரியும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையினை மூடிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதனால் தூத்துக்குடியில் அமைதி திரும்பிட பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

 

நேற்று மாலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், வணிகர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 

தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஆலைக்கு எதிராகவே அரசு வாதிட்டு வருகிறது. ஆலையைத் திறப்பதற்கு இனி வாய்ப்பில்லை. இதை மக்கள் புரிந்துகொண்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS