கடமை ஒருபுறம், கைகுழந்தை மறுபுறம்:வைரல் புகைப்படம்!

Home > தமிழ் news
By |
கடமை ஒருபுறம், கைகுழந்தை மறுபுறம்:வைரல் புகைப்படம்!

மத்திய பிரதேசத்தின் ஜான்சி பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வேலை பார்த்து வரும் கான்ஸ்டபிள் அர்ச்சனா தன் இடையறாத அரசுப் பணிக்கு நடுவில் குழந்தையையும் கவனித்துக்கொண்டு அதே சமயம் தன் கடமையையும் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஆணும் பெண்ணும் சமம் என்கிற சித்தாந்தம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தனர். இன்று ஏறக்குறைய இந்த நிலையை அடைந்தாலும் கூட, பெண்ணுக்கே உண்டான கடமைகளும் பொறுப்புகளும் தன்னிகரற்றவைதான் என்பதை இந்த புகைப்படம் மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.


குடும்ப சூழல், கனவு, பொருளாதார பின்னடைவு என கைக் குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. அப்படித்தான் அர்ச்சனா ஜெயிண்ட் யாதவ் தன் 6 மாத கைக்குழந்தையை காவல் நிலையத்தில் வைத்துக்கொண்டு ஒருபுறம் குழந்தையையும் இன்னொருபுறம் வேலையையும் ஒருசேர பார்த்துக்கொள்ளும் அரிய புகைப்படத்தை அவரது சீனியர் போலீஸ் ஆபீசர் இணையத்தில் பதிவிட்டு அவரின் சின்சியாரிட்டிக்கு 1000 ரூபாய் அளிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.


கான்ஸ்டபிள் அர்ச்சனாவின் கணவர், ஹரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதும் இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

MOTHERCOP, VIRAL, POLICEWOMEN, ARCHANAJEYANTYADAV, MADHYAPRADESH