#தளபதி63: 'தொழில்நுட்பக்குழு+ரிலீஸ்'.. முழு விவரங்கள் உள்ளே!

Home > தமிழ் news
By |
#தளபதி63: 'தொழில்நுட்பக்குழு+ரிலீஸ்'.. முழு விவரங்கள் உள்ளே!

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ அர்ச்சனா கல்பாத்தி இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில்,'' விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,'' என தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் தளபதி 63 படம் குறித்த அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இப்படம் ஒரு பக்கா மாஸ் பேமிலி எண்டர்டெயினராக இருக்கும் எனவும், மெர்சல் கூட்டணியான விஜய்-அட்லீ-ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இப்படத்தில் இணைவது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பணியாற்றவுள்ள தொழில்நுட்பக்குழு குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

தளபதி 63 படக்குழு விவரம்:

 

தயாரிப்பு நிறுவனம் - ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் 

நடிகர் - விஜய் 

இயக்குநர் - அட்லீ 

 இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் 

ஒளிப்பதிவு- ஜி.கே.விஷ்ணு 

கலை இயக்குநர் - முத்துராஜ் 

சண்டைப்பயிற்சி - அனல் அரசு 

பாடலாசிரியர் - விவேக் 

எடிட்டிங் - ரூபன் எல்.ஆண்டனி 

எக்சிகியூடிவ் ப்ரொடியூசர்- எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் 

கிரியேட்டிவ் ப்ரொடியூசர் - அர்ச்சனா கல்பாத்தி  

 

அறிக்கையின் கடைசியில் இறுதியாக #HappyDiwali2019 என தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் தளபதி 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

VIJAY, ATLEE, THALAPATHY63