தளபதி 64: மணிரத்னத்துடன் கைகோர்க்கும் விஜய்?
Home > தமிழ் news
அட்லீ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. செக்க சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் அடுத்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு மூவரும் நடிக்கப் போவதாகவும் இது பொன்னியின் செல்வன் கதை எனவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
இது உண்மையா? என்பதை அறிந்து கொள்ள நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தோம். இது உண்மையில்லை என்றும் மார்ச்,2019 வரை வேறு எந்த புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளும் ஐடியா விஜய்க்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் விஜய்,விக்ரம் இருவருக்கும் மணிரத்னம் லுக் டெஸ்ட் செய்து பார்த்தார் என்பதில் உண்மையில்லை என்றும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
VIJAY, MANIRATNAM
