'கார்ல மட்டுமில்ல கலப்பையிலும் செய்யலாம்'.. கெத்து காட்டிய இளைஞர்கள்!
Home > தமிழ் newsகனடா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகர் ஆப்ரே கிராக்கி டிராகம் தமது ஸ்கார்பியன் என்ற பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்த பாடல் தொகுப்பில் அடங்கிய 'இன் மை பீலிங்ஸ்' என்ற பாடலின் இடையில் இடம்பெற்றுள்ள 'கிகி ஐ லவ்யூ' என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏற வேண்டும் என்பதுதான் 'கிகி' சவால்.
வெளிநாடுகளில் தொடங்கிய இந்த மோகம் தற்போது இந்தியா வரையிலும் நீண்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த சவாலை மேற்கொள்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மும்பை,பெங்களூர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் காரில் மட்டும் அல்ல கலப்பையிலும் இந்த சவாலை செய்யலாம் என, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். அங்குள்ள வயல்வெளி பகுதியில் மாடுகளைப் பூட்டி அனில் கீலா, பில்லி திரிபாதி ஆகிய 2 இளைஞர்களும் தங்கள் உழவுமாடுகளை ஓடவிட்டு அதிலிருந்து குதித்து
சேற்றுக்குள் நடனமாடுகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
#kikichallenge india 🇮🇳 #kiki challenge pic.twitter.com/KZc8DEU0pK
— பிரவின்™ (@praveenruler) August 3, 2018