அமெரிக்காவின் மிசோரி நகரில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு(25), அடையாளம் தெரியாத மர்ம நபரால் கடந்த சனிக்கிழமை சுட்டு கொலை செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரத் கொப்பு படித்துக் கொண்டே அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாகப் பணியாற்றி வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் ஹோட்டலுக்கு சென்ற சரத் கொப்புவை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு தப்பிவிட்டார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் கொப்பு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.
இதற்கிடையே சரத் கொப்புவை சுட்டவர் குறித்து அடையாளம் கூறுவோருக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் என கனாஸ்சிட்டி போலீசார் அறிவித்துள்ளனர். தற்போது இறந்த சரத் கொப்புவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இதுதொடர்பாக தேவையான உதவிகளை செய்யக் கோரி தெலுங்கானா அமைச்சர் ராமராவ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கிணற்றுக்குள் ஆட்டோ விழுந்ததில் 10 பேர் பலி
- Multiple people shot at high school in US
- கால்களால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவன்
- Family of four commits suicide in Secunderabad
- மகளிர் தினத்திற்கு விடுமுறை அளித்த மாநில அரசு!
- Shooting at US university: Two shot dead by teen gunman
- தவித்த 'பிளஸ் டூ' மாணவிகள்.. உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்
- Girl sets fiance on fire to unite with lover
- மனைவியுடன் தொடர்பு: இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த கணவர்