டேட்டிங் ஆப்’பில் மேட்ச் ஆன பெண்: க்ளிக் பண்ணி உள்நுழைந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Home > தமிழ் newsவாட்ஸ் அப் நன்கு தெரிந்தவர்களுடனும், பேஸ்புக் ஓரளவு தெரிந்தவர்களுடனும், ட்விட்டர் முற்றிலும் தெரியாதவர்களுடனுடம் நம்மை இணைக்கிறது. எனினும் இந்த தொடர்புகள் நட்பாகவோ, காதலாகவோ, திருமணமாகவோ மலர்வதற்கு சில காலங்களாகவது எடுத்துக்கொள்வதுண்டு. பலரும் இதுபோன்று தத்தம், வாழ்க்கைத் துணையை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தேர்ந்தெடுக்கும் நிமித்தமாகவே சமூக வலைதளங்களுக்குள் உலா வருவதும் உண்டு. இதில் பார்த்து பேசி பழகுவதென்பதுதான் இந்த காலகட்டத்துக்கு நடுவில் இருக்கும் இடைவெளி.
ஆனால் இதற்காகவே ஒரு அப்ளிகேஷன் (செயலி) இருந்தால்? வரம்தானே?. அந்த வரமாய் நம் இளசுகளுக்கு கிடைத்த அரிய ஆப்’தான் டிண்டர். பேரைக் கேட்டாலே சிலருக்கு அதிரும், சிலருக்கு புதிதாகவும், சிலருக்கு புதிராகவும் தோன்றலாம்.
ஆனால் இந்த அப்ளிகேஷனில், ஆப் மூலமாக இணையும் ஆண்-பெண் (தன் பாலினமாக கூட இருக்கலாம்) இருவரின் ஒப்புதல் இருந்தால் உடனே இணையும் வாய்ப்பை அளிக்கிறது என்பதுதான் பலரையும் கவர்ந்த சிறப்பான தகவல். பிறகென்ன உடனே சாட்டிங், அடுத்து மீட்டிங், அதற்கடுத்து டேட்டிங் என போக வேண்டியதுதான். இந்த நிலையில் தன் சகோதரியுடனே தன் ஃபுரொஃபைல் பேட்ச் ஆகியதால் இளைஞர் ஒருவர் மனமுடைந்து தனக்கொரு எலெக்ட்ரிக் நாற்காலியை கொடுங்கள் என ட்விட்டர் புலம்பியுள்ளார்.
பலரையும் அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவத்திற்கு பிறகு, அவருடன் சாட்டிங் செய்த அவரது சகோதரி, ‘உனக்கு இன்னும் 18 வயது ஆகலியே.. நீ ஏண்டா இந்த அப்ளிகேஷனுக்குள் எல்லாம் வர்ற?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞனோ, ‘நீதான் என் புரொஃபைலை க்ளிக் செய்தாய்.. இரு நான் அம்மாவிடம் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு அவரின் சகோதரியோ தான் ஏற்கனவே அம்மாவிடம் சொல்லிவிட்டதாக கூறி அதிரவைத்துள்ளார். இந்த உரையாடல் பதிவையும் அந்த இளைஞர் தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் இந்த செயலியின் செயலை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.