'பாப் மார்லே' போல இருக்குறாரே....நம்ம இந்தியன் கிரிக்கெட்டிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
Home > தமிழ் newsஇந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான டெக்கி டோரியாவை இந்தியாவின் பாப் மார்லே என அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள்.
இந்தியாவின் வட மாநிலங்களின் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின்,நியோபாங் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தான் டெக்கி டோரியா. இவர் உலகப்புகழ் பெற்ற ஜமைக்கா பாடகர் பாப் மார்லே போன்ற முக அமைப்பும்,ஹேர் ஸ்டைலும் இருப்பதால் சிறு வயது முதலே அனைவரும் டெக்கியை பாப் மார்லே என்று அழைத்து வந்தனர்.
இவர் பள்ளி படிப்பை தொடங்கிய காலத்திலேயே அவரது நண்பர்கள் டெக்கியை பாப் மார்லே என அழைக்க தொடங்கினார்கள்.ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை.மேலும் பாப் மார்லே என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த அவர் கூகுளில் தேடிய பின்புதான் அவர் யார் என அறிந்து கொண்டார்.
தற்போது 24 வயதான டெக்கி இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் முதல் முறையாக களமிறங்கி விளையாடி வருகிறார்.மேலும் அருணாச்சல் அணிக்காக 6 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள டெக்கி டோரியா,230 ரன்கள் மற்றும் 13 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
டெக்கி டோரியா ஒரு ஆல் ரவுண்டர் என்பது கூடுதல் சிறப்பு.இருப்பினும் மைதானத்தில் இவர் ஆடும் நடனத்திற்காகவே இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.