‘அட்சுத்தூக்கிய தவான்’: நியூஸி மண்ணில் முதல்நாளே இந்தியா அபார வெற்றி!
Home > தமிழ் newsநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நியூஸிலாந்தின் நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, 38 ஓவர்களில் 157 ரன்களில் சுருண்டதை அடுத்து, 158 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆனால் சூரிய ஒளியினால் 49 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா நியூஸிலாந்தை வீழ்த்தி, வெற்றிகொண்டது.
தவானின் அரைசதமும் இந்த வெற்றியை நிர்ணயித்ததற்காக முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போட்டியின் 6-வது ஓவரில் 10 ரன்களை எட்டியபோதே தவான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 5000 ரன்களை எடுத்ததற்கான புகழைப் பெற்றதோடு 5000 ரன்களை 118 இன்னிங்ஸில் கடந்த 2-வது இந்திய வீரராகியுள்ளார்.