'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'?...பயிற்சியாளரின் சூசகமான பதில்!

Home > தமிழ் news
By |

தடை விதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறுவது குறித்து,பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சூசகமாக பதிலளித்துள்ளார்.

'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'?...பயிற்சியாளரின் சூசகமான பதில்!

ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர சாதனை படைத்த இந்திய அணி,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.பலம் பொருந்திய அணியாக இருந்த ஆஸ்திரேலியவின் தோல்வி அந்த நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாது,அணி நிர்வாகத்தையும் கவலைக்கு உள்ளாகியது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாதது தான் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள்.மேலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருவரும் இல்லை என்றால், அணிக்கு மிகப்பெரிய சோதனை இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் பொங்கி வந்தார்கள்.

இதனிடையே   ரசிகர்களின் ஆதங்கத்தை நன்றாக புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்,ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரை அணிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளது.ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் முடியவில்லை.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முக்கிய திருப்புமுனையாக இந்தியாவுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கான அணி இல்லை என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.பயிற்சியாளரின் இந்த பதில் ஸ்மித், வார்னர் ஆகியோர் அணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018, DAVIDWARNER, JUSTIN LANGER, AUSTRALIA, WORLD CUP 2019