‘வந்து இறங்கிட்டோம்ல’.. டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய படையின் இறுதி பட்டியல் இதோ!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்து 72 ஆண்டுகாலங்களில் இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.
இதனை அடுத்து வரும் ஜனவரி 12-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பும்ராவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் விளையாடுவார் எனவும் பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு பிறகான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் (நியூஸிலாந்துக்கு எதிராக) இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ஆஸ்திரேலியாவுவுடன் மோதும் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ் , கலீல் அகமது, முகமது ஷமி
நியூஸிலாந்துடன் மோதும் டி-20 அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது.
The boys are here in scenic Sydney ahead of the three-match ODI series against Australia 😎😎#AUSvIND pic.twitter.com/MDaRAVK8Np
— BCCI (@BCCI) January 8, 2019