Looks like you've blocked notifications!
பெண் பத்திரிக்கையாளரைத் 'தொடுவது' கண்ணியமான செயலல்ல: கனிமொழி கண்டனம்

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடையும் தருவாயில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார்.

 

தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து, அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் தனது  அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்த நிலையில் பெண் பத்திரிகையாளரைத் தொடுவது கண்ணியமான செயல் அல்ல என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம்.  பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல.  சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை,'' என தெரிவித்திருக்கிறார்.

BY MANJULA | APR 18, 2018 1:19 PM #KANIMOZHI #NIRMALADEVI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS