
சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே,சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தமிழ்படம் 2.0.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த நிலையில் தங்களது படத்தலைப்பினை தமிழ்படம் குழுவினர் மாற்றியுள்ளனர்.
அதன்படி தமிழ்படம் 2.0 என இருந்த தலைப்பை தற்போது தமிழ்படம் 2 என மாற்றியுள்ளனர். ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால், தங்களது படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக இதுகுறித்து வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
BY MANJULA | JUN 21, 2018 5:09 PM #TAMIZHPADAM2 #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS