தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்!

Home > தமிழ் news
By |
தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்!

தீபாவளி நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசுகளுக்கு நேர வரம்பு இருந்தது போல் மதுவுக்கு நேர வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை. வழக்கமான டாஸ்மாக் அலுவலக நேரத்திலேயே டாஸ்மாக்கில் மது விற்பனையாகியது.

 

இந்நிலையில் தீபாவளி என்பதால் ஒரே நாளில் ஒட்டுமொத்த குடிமகன்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு, கடந்த ஆண்டு ரூ 260 கோடிக்கு மது விற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ 70 கோடி அதிகமாக சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் என நெட்டிசன்கள் கலாய்த்தும், சிலரோ, இப்படி லாபத்தில் ஓடும்பொழுது ஏன் டோர் டெலிவரி செய்யக்கூடாது? அவ்வாறு செய்தால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையுமே என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். 

EDAPPADIKPALANISWAMI, TAMILNADU, TASMAC, TARGETTASMAC, LIQUOR, WINESHOP