ரஜினி படம் ரிலீஸாகும் தியேட்டரிலேயே திருமணம் செய்துகொண்ட ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள பேட்ட திரைப்பட முதல் நாள் முதல் ஷோ-வில் தியேட்டரிலேயே திருமணம் செய்துகொண்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ரஜினி படம் ரிலீஸாகும் தியேட்டரிலேயே திருமணம் செய்துகொண்ட ரசிகர்கள்!

சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் பேட்ட திரைப்படம் வெளியாகும் முன்பு அங்கு சென்று தியேட்டரிலேயே ரஜினி ரசிகரான அன்பரசு என்பவர் தனது காதலி காமாட்சியை திருமணம் செய்துள்ளார்.

3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முறையான வசதிகள் இல்லாத காரணத்தால் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியை அணுகி, திருமணம் செய்ய உதவி கேட்டதை அடுத்து, இவர்களின் இத்திருமணத்தை ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டரில் வைத்து நடத்தியதோடு, தம்பதியர்களுக்கு ரஜினி ரசிகர்கள் சீர் வழங்கியுள்ளனர்.

இதேபோல் தஞ்சாவூரிலும் ரஜினி ரசிகரான ஜோதிராமன் என்பவர் ரஜினி படம் வெளியாகும் நாளன்று திருமணம் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன், ‘பேட்ட’ திரைப்படம் வெளியான தியேட்டரில் திருமணம் செய்துள்ளார்.

RAJINIFANS, MARRIAGE