இறங்கி சென்று இறகு பந்து விளையாடிய முதல்வர்.. வைரல் வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
இறங்கி சென்று இறகு பந்து விளையாடிய முதல்வர்.. வைரல் வீடியோ உள்ளே!

தமிழக முதல்வர், எடப்பாடி கே பழனிசாமி அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்தவர். அவர் இன்று சேலம் மாநகராட்சியின் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். நிகழ்வில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவனும் எடப்பாடியும் இறகுப்பந்து விளையாடிய வீடியோதான் இன்றைய வைரல்.

 

சேலத்தில் 5.63 கோடி செலவில் தர்ம நகர் பசுமைவெளிப் பூங்கா, அபிராமி கார்டன் பசுமைவெளிப் பூங்கா, முல்லை நகர், கிழக்கு மேம்பால நகர் , பிரகாசம் நகர், குறிஞ்சி நகர், பரமன் நகர், கம்பன் தெரு, அய்யாசாமி பார்க் யெல்லீஸ் கார்டன், காந்தி நகர், அபிராமி கார்டன் பசுமைவெளிப் பூங்கா என 12 பசுமைவெளிப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கச் சென்றார். உடன் சேலம் கலெக்டர் ரோகினி, மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் சென்றிருந்தனர்.

 

பார்க்கினுள் சென்றவர் அங்கிருந்த டென்னிஸ் கோர்ட் அருகே சென்றவுடன், அருகில் இருந்த இளங்கோவனிடம், ’விளையாடலாம்’ என்று வினவ இளங்கோவன் ஆர்வமாக, அப்புறம் என்ன? இருவரும் களத்தில் இறங்கி இறகுபந்து விளையாடத் தொடங்கினர்.  முதல்வர் பழனிசாமி ஷட்டிலாக ஷட்டில் கார்க் விளையாட, அவருக்கு நேர் எதிரே இருந்த இளங்கோவன் திணறிப் போயினார். மற்றவர்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.  விளையாட்டு முடிய, முதல்வரை பார்த்து இளங்கோவன், ‘நல்லா விளையாடுறீங்க அண்ணா’ என்க, முதல்வரும் பதிலுக்கு ‘நீயும்தான்பா’ என்று காம்ப்ளிமெண்ட் செய்துள்ளார்.

EDAPPADIKPALANISWAMI, TAMILNADUCM