புகைப்பட உதவி @ANI

 

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சபாநாயகர் அறையில் 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டார்.

 

தொலைக்காட்சியில் பார்த்தால் முதலமைச்சர் தன்னை சந்திக்க வந்த ஸ்டாலினை பார்க்க மறுத்ததாக செய்திவந்தது.ஸ்டாலினை சந்திக்க நான் மறுத்ததாக தவறான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது.ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது.எதிர்க்கட்சிகள்,சில இயக்கங்கள் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர்.

 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது; மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும்.

 

இதனால் தான் தூத்துக்குடி செல்லவில்லை.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை;தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது,'' இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS