6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் எழுதும் குரூப்-2: காலி பணியிடங்கள் இவ்வளவுதானா?

Home > தமிழ் news
By |
6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் எழுதும் குரூப்-2: காலி பணியிடங்கள் இவ்வளவுதானா?

தமிழகத்தை பொருத்தவரை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேவானையம் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டு வரும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகள் பலவகைகளாக நிகழ்த்தப்படுகின்றன. 

 

இவற்றுள் எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் நிலையாக நேர்முகத் தேர்வு என்று சில பிரிவுகளும், நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தும் சில பிரிவுகளும் இருக்கின்றன. சில பிரிவுகளில் எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றால் நேரடியாக அரசு வேலைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

 

இதற்கென்றே இருக்கும் பல பயிற்சி நிறுவனங்களில் வருடம் முழுவதும் இந்த தேர்வாணையத்தின் பேரில் நிகழும் பலவகை பணிகளுக்கான வெவ்வேறு தேர்வுகளில் வெல்வதற்கான பயிற்சிகளை பலர் மேற்கொண்டும் வருகின்றனர். இவர்கள் அல்லாது, வேலைக்குச் செல்வோர், வேறு பணிகளை தற்காலிகமாக செய்வோர், துறை சம்மந்த வேலைகளை செய்துகொண்டிருப்போர் என பலரும் இந்த தேர்வுகளை எழுத முனைகின்றனர். 

 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில், குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 1,119 காலி பணியிடங்களுக்கு, 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் இந்த தேர்வினை எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TNPSC, GROUP2