‘இதுதான்’அமெரிக்காவில் தமிழிசை பெறவிருக்கும் சர்வதேச விருது!

Home > தமிழ் news
By |
‘இதுதான்’அமெரிக்காவில் தமிழிசை பெறவிருக்கும் சர்வதேச விருது!

அமெரிக்காவின் முக்கியமான அமைப்பான பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் இந்த ஆண்டுக்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்கிற பெயரில் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு விருது வழங்கவுள்ளது. 

 

இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் அமெரிக்கா சென்று விருது வாங்கிய கையோடு சிகாகோ மற்றும் வாஷிங்டனில் நடக்கும் தமிழ் சங்க விழாக்களில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். 

 

அரசியல், மருத்துவம், மற்றும் சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பெண்மணி என்கிற அடிப்படையில் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.