அதிர்ச்சியில் தமிழக கபடி வீரர்: திடீரென மத்திய அரசு பணியிலிருந்து நீக்கம்!

Home > தமிழ் news
By |
அதிர்ச்சியில் தமிழக கபடி வீரர்: திடீரென மத்திய அரசு பணியிலிருந்து நீக்கம்!

தமிழக வீரரும்,புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வருபவருமான அருண், தபால் துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நடவடிக்கை, விளையாட்டு ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய தபால் துறையில் சென்னை தெற்கு பிரிவில் பணியாற்றி வருபவர் அருண்.இவர் திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் இந்திய தபால் துறை கபடி அணிக்காக விளையாடி வந்தார்.மேலும் புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணிக்காக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விளையாடினார்.

 

தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்ததால்,கடுமையான  பயிற்சி மற்றும் போட்டிக்காக தொடர்ந்து விடுப்பு எடுத்து வந்துள்ளார்.ஆனால், மத்திய சிவில் பணிகள் விதிமுறை ஐந்து, அதன் உட்பிரிவு ஒன்றின் படி, தற்காலிக ஊழியர் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாது. இது மீறப்பட்டதால், தபால் துறை பணியில் இருந்து அருண் நீக்கப்படுவதாக அறிவித்து, சென்னை தெற்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளர் ரங்கநாதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

தபால் துறையின் இந்த நடவடிக்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அருணுக்கு தபால் துறையில் மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TAMIL THALAIVAS, PRO KABADDI