சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் 'தமிழ்படம் 2.0' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தநிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக, இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

சிவா, ஐஸ்வர்யா மேனன் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் இப்படத்தில் திஷா பாண்டே,சதீஷ்,சந்தான பாரதி,மனோபாலா,ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

சிவா போலீஸ் அதிகாரி வேடமேற்று நடித்திருக்கும் இப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BY MANJULA | JUN 8, 2018 1:26 PM #SHIVA #TAMILPADAM2 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS