சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் 'தமிழ்படம் 2' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் அறிமுகப்பாடலான 'நா யாருமில்ல' பாடலை, இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமான பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

 

இந்தநிலையில் தமிழ்படம் 2 சென்சார் மற்றும் பட வெளியீடு குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி பிரபாஸ் போல சிவா யூ சான்றிதழை தூக்கிக்கொண்டு வர, கீழே ஜூலை வெளியீடு என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

பயங்கரமான நாளில் 'தமிழ்படம் 2' ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசனை!

https://www.behindwoods.com/news-shots/tamil-news/pretty-scary-date-coming-up-for-shivas-tamilpadam-2-release.html

 

முன்னதாக, ''ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்,'' என சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இதனால் ஜூலை 13-ம் தேதி 'தமிழ்படம் 2' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUL 2, 2018 9:13 PM #TAMILPADAM2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS