Aan Devadhai BNS Banner

நக்கீரனுக்காக குரல் கொடுத்த ‘தி இந்து’ குழும தலைவர் N.ராம்.. பரபரப்பு பேட்டி!

Home > தமிழ் news
By |
நக்கீரனுக்காக குரல் கொடுத்த ‘தி இந்து’ குழும தலைவர் N.ராம்.. பரபரப்பு பேட்டி!

நிர்மலா தேவியின் பரபரப்பு வழக்கில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தொடர்பு படுத்தி நக்கீரன் கடந்த ஏப்ரல் மாதம் எழுதிய பரபரப்பு கட்டுரையினால் அண்மையில் ஆளுநர் மாளிகை நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது திடீர் வழக்கு தொடர்ந்தது. கைது செய்யும் நடவடிக்கைகள் அத்தனை துரிதமாக நடந்தபோது, பத்திரிகை சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. ஆனால் ஊடக சுதந்திரம் முடக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என, நேரடியாகக் களத்தில் இறங்கியவர்தான் தி இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர், ஆசிரியர் என்.ராம். இதுபற்றிய பரபரப்பு கேள்விகளுக்கு பகீரங்கமாக பதில் அளித்திருக்கிறார்.


இதுபோன்று ஊடகங்களுக்கான பிரச்சனைகளில் தலையிடுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறும் என்.ராம், மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் எளிமையாக செல்லும் அளவுக்குக் கூட, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுடன் கூடிய சூழல் இருப்பதாகவும், அவற்றையும் மீறி இவ்வழக்கில் நக்கீரன் கோபால் வெளியிட்ட செய்தி ஒன்றும் கிரிமினல் குற்றத்துக்கான செயலோ, அல்லது அவர் வெளியிட்டுள்ளது அவதூறு செய்தியோ இல்லை  என்று வழக்குரைஞர்கள் மற்றும் மாஜிஸ்த்ரேட்டுகள் மத்தியில் கூறியிருக்கிறார்.  ஆடிப்போன அத்தனை பேரும், ‘பிறகு? ஆளுநரை பற்றிய இத்தகைய புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு இப்படி செய்தி போடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘அப்படியானால் அது மாதிரி செய்யாதீர்கள் என அறிவுரை கூறுங்கள். உங்களுக்கு நக்கீரன் கோபால் பதில் அளிப்பார். அளிக்கவில்லை என்றால்தான் தவறு’ என பேச்சாலேயே நிகர் செய்திருக்கிறார் வழக்கை.  எனினும் இந்து குழுமம் இதுபோன்ற ஒரு செய்தியையோ அல்லது கருத்துரையினையோ வெளியிடுமா என்றால், இந்து குழம நாளிதழின் செய்தித் தன்மை ஒருவேளை நக்கீரன் செய்தியாளர் போன்றோருக்கு ‘போரடிக்கும்’ ஊடகமாகக் கூட தெரியலாம்.. ஆனால் நாங்கள் வெளியிடுவது போன்ற செய்தியைத் தான் மற்றவர்களும் வெளியிட வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அது ஊடக தர்மம் அல்ல. ஒவ்வொன்றும் ஜர்னலிசத்தின் அங்கம்தான் என்று பிரித்து மேய்கிறார்.


அவரின் பேச்சை வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்துகொள்ளலாமா என வேண்டுகோள் வைத்துவிட்டு, விரிவாக கேட்டிருக்கிறார் மாஜிஸ்த்ரேட். அதன் பிறகு பேசியவர் ‘நக்கீரன் கோபால் போன்ற ஊடகவியலாளருக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும்’ என்றும்  ‘ஊடகங்கள் புலனாய்வு ரீதியில் வெளியிடும் இதுபோன்ற கட்டுரைகளால் பணிபுரிய இயலாத மனநிலை படைத்தவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த பதவிப் பொறுப்புகளுக்கு தகுதியில்லாதவர்கள்’ என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்று தெரியாமல் எழும்பூர் நீதிமன்றம் வரை நக்கீரன் கோபால் சென்றுள்ள சூழலுக்கு அவரை ஆளாக்கிய இந்த கைது நடவடிக்கைக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்த என்.ராம், ‘இதுபோன்ற செய்திகளை ஊடகவியலாளர்கள் வெளியிடுவடதற்கு சட்டமே தடையாக இருந்தாலும், அந்த சட்டத்தை மறுசீராய்வுத்தான் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.


ஜர்னலிசத்தின் பரந்துபட்ட தன்மை நக்கீரனுக்கும் இந்துவுக்கும் முற்றிலும் மாறுபட்டாலும் கூட, தொடர்ந்து தன் மீது தொட்டு, இந்தியா டுடே உள்ளிட்ட பல பெரும் பத்திரிகைகள் மீதும் அரசு-அரசு சார்ந்த விமர்சனக் கட்டுரைகளுக்கும், புலனாய்வு ஊடகங்களின் கட்டுரைகளுக்கும் எதிராக நிகழ்ந்துள்ளன. சோ ராமசாமி உள்ளிட்ட சீனியர் ஜர்னலிஸ்டுகள் சந்தித்துள்ளனர். ஆனால் இன்று ஒரு ஊடகத்துக்கு நேர்ந்ததுதான் நாளை மற்ற ஊடகங்களுக்கும். ஊடகத்தின் தார்மீகமான கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும்பொழுது ஒன்றிணைந்து கரம் கோர்ப்பதுதான் ஊடக ஒற்றுமையை வளர்க்கும் என்பதால், இந்து-நக்கீரன் கருத்து முரண்பாடுகளைத் தாண்டி, நக்கீரன் கொபால் விஷயத்தில் தான் தலையிட்டதாகக் கூறுகிறார்.


மேலும்,  ‘பலவீனமான ஒரு அரசு தன்னை பாதுகாப்பதற்காக, முந்தைய முதல்வர் ஜெயலலிதா கூட செய்யாத அளவுக்கான செயல்களை நடப்பு அரசு செய்கிறது. ஆனால் ஜெயலலிதா கூட, தன் மீதான கருத்துச் சாடல்களுக்கான அடிப்படை-ஆழம்- புரிதல் வலுவாக இருக்கும்போது அவற்றை புரிந்துகொள்பவர். பிரிவு 124ன்படி ஆளுநரையோ-ஜனாதிபதியோ ஆயுதங்களால் தாக்குதலுக்கு உட்படுத்தும்போதோ அல்லது அவர்களை கத்தி முனையில், சட்ட ரீதியான பணிசெய்ய முடியாத நிலைக்கு ஆட்படுத்தும்போதோ பிரயோகிக்கப்பட வேண்டிய இந்த சட்டத்தை ராஜ்பவன் நக்கீரன் மீது தொடுத்திருக்கிறது. ஆனால் நக்கீரன் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட புலனாய்வுகளை நடத்திக்கொண்டேதான் இருப்பார் என்பதை நான் அறிவேன். ஆக, நடப்பு அரசு இந்த நிலைகளை சரியாக புரிந்துகொண்டு ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துதல் அவசியம்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

NAKKEERANGOPALARREST, HINDUNRAM, NAKKEERANGOPAL, INVESTIGATIONJOURNALISM, TAMILNADU, NIRMALADEVI, GOVERNOR