'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை!
Home > தமிழ் news
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதால், சென்னை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று காலை தொடங்கி பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியத்திற்கு மேல் பட்டினப்பாக்கம், சாந்தோம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், கந்தன்சாவடி, அடையாறு,ஆவடி, அம்பத்தூர், பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர் என சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் அதனை உறுதி செய்வதுபோல தற்போது மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.