டி20 உலகக்கோப்பை அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
Home > தமிழ் newsஅடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2020) ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட உள்ள டி-20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த முறை ஆடவர்களுக்கான டி-20 உலகக் கோப்பை மற்றும் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை இரண்டும் ஆஸ்திரேலியாவிலேயே நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி 21 -ஆம் தேதி முதல் மார்ச் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதில் கடைசி ஆட்டம் நடைபெறும் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை முடிந்த உடன் ஆடவர்களுக்கான டி-20 உலகக் கோப்பை அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவித்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முதல் ஆட்டம் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக அக்டோபர் 24 -ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு்ள்ளது.
2007 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் டி-20 உலகக் கோப்பை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.