‘பெங்களூரில் ஆர்டர் .. ராஜஸ்தானில் இருந்து 15 நிமிடத்தில் பைக்கில் வரும் ஸிவிக்கி பாய்’?

Home > தமிழ் news
By |

பெங்களூரில் இருந்து உணவு ஆர்டர் செய்த நபர் ஒருவருக்கு ஸ்விக்கி டெலிவரி பாய் ராஜஸ்தானில் இருந்து உணவை எடுத்துக்கொண்டு மோட்டர் பைக்கில் வருவதுபோன்று லொகேஷன் ட்ராக்கரில் காட்டியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘பெங்களூரில் ஆர்டர் .. ராஜஸ்தானில் இருந்து 15 நிமிடத்தில் பைக்கில் வரும் ஸிவிக்கி பாய்’?

பொதுவாகவே ஸிவிக்கியில் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும்போது நேரம் ஆகிவிட்டால், தங்களுக்கான சிறந்த சேவையை வழங்கவே நாங்கள் முற்படுகிறோம். தயவு செய்து சிரமத்துக்கு மன்னிக்கவும் என்று ஸிவிக்கியில் இருந்து ஒரு தகவல் மெசேஜ் காண்பிக்கப்படும்.  அந்த வகையில், பெங்களூரில் இருந்து ஸிவிக்கியில் உணவு ஆர்டர் செய்த நபர் ஒருவரின் ஆர்டரை பிக்-அப் செய்தவுடன், 15 நிமிடங்களில் டெலிவரி பாய் உணவுடன் வந்துவிடுவார் என ஸிவிக்கி அப்ளிகேஷன் காட்டியுள்ளது. காரணம் அந்த உணவகம், கஸ்டமரின் இருப்பிடத்துக்கு மிக அருகிலேயே இருந்தது என்பதுதான்.

ஆனால் கஸ்டமர் வெகுநேரம் காத்திருந்தும், டெலிவரி பாய் உணவுடன் வரவில்லை என்பதை அறிந்த கஸ்டமர், லொகேஷன் டிராக்கரில் உணவு டெலிவரி பாய் எங்கு வந்துகொண்டிருக்கிறார் என்று சோதனையிட்ட பிறகு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆம், உணவு டெலிவரி பாய் வந்துகொண்டிருந்ததோ ராஜஸ்தானில் இருந்து, அதுவும் மோட்டர் பைக்கில். அவ்வளவுதான். கஸ்டமரின் கதி என்னவாகியிருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. பார்கவ் ராஜன் என்கிற அந்த கஸ்டமரின் சொந்த ஊரான லொகேஷனை எடுத்துக்கொண்டார்களா? அப்படியே எடுத்துக்கொண்டாலும், அங்கிருந்து பெங்களூர் வரை டெலிவரி சர்வீஸா? அதுவும் 15 நிமிடங்களிலேயே என்று முற்றுமுழுக்க குழப்பங்களாக இருந்துள்ளன.

பிறகு அந்த ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து சமூக வலைதளங்களில் அந்த கஸ்டமர் பதிவிட்டுள்ளார். இதற்கு ஸ்விக்கி நிறுவனம், இந்த தொழில்நுட்ப சிக்கல் எப்படி நடந்தது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இதனை உடனடியாக சரிசெய்ய முற்படுகிறோம். தங்களை சிரமத்துக்குள்ளாக்கியதற்கு வருந்துகிறோம் என்று ரெஸ்பான்ஸ் செய்திருந்தது. இடையே இந்த சம்பவத்தை பலரும் கலாய்த்தனர். ஒளியின் வேகம் அதிகமா இல்லை ஸ்விக்கி டெலிவரி பாயின் வேகம் அதிகமா என்றெல்லாம் கமெண்டுகல் எழுந்தன.  இவ்வாறு கலாய்த்த நெட்டிசன்களில் ஒருவருக்கு,  ஸிவிக்கி நிறுவனம், ‘ஆமாம், எங்கள் கஸ்டமருக்காக நிலவுக்கு பறந்து சென்றுகூட டெலிவரி செய்துவிட்டு திரும்புவோம்’ என்று பாசிட்டிவாகவும் ஜாலியாகவும் பதிலளித்துள்ளது.

 

SWIGGY, FOODDELIVERY, ONLINEFOOD, BIZARRE