நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும், பாஸ்போர்ட் சேவா ஆப் (Passport Seva app) இன்று இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த ஆப்பை இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

 

பின்னர் இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ''நாடு முழுவதும் மக்களவை தொகுதிக்கு ஒன்று வீதம், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.

 

இந்த ஆப் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் அந்த பகுதி காவல்துறையினர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, நமது முகவரிக்கு தபாலில் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் அலைச்சல் இன்றி இருந்த இடத்திலேயே பாஸ்போர்ட்டைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 26, 2018 4:30 PM #PASSPORT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS