சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


இந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஜூலை 23-ம் தேதியன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால், சூர்யாவின் பிறந்தநாளான 23-ம் தேதியன்று 'என்ஜிகே' படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUL 2, 2018 12:01 PM #SURIYA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS