'வீரர்கள் தான் எனக்கு முக்கியம்'...மகளின் திருமணத்தில்...'வைர வியாபாரியின் நெகிழவைத்த செயல்'!
Home > News Shots > தமிழ் newsதனது மகளின் திருமணத்திற்கு பிறகு நடக்கவிருந்த ஆடம்பரமான விருந்தினை ரத்து செய்து,அதற்கான தொகையினை பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார் வைர வியாபாரி ஒருவர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது தீவிரவாதிகள் கோழைத்தனமான தற்கொலை படை தாக்குதலை நடத்தினார்கள்.இந்த கொடூரத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.மரணமடைந்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.பலரும் தங்களால் முடிந்த தொகையினை பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ.16 லட்சத்தை காஷ்மீர் தாக்குதலுக்கு நிதியாக வழங்கியுள்ளார்.அதில் ரூ11 லட்சத்தை வீரர்களின் குடும்பத்துக்கும், ரூ.5 லட்சத்தை தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கும் அளித்துள்ளார்.குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான டேவஷி மானெக் தனது மகளின் திருமணத்தை நேற்று விமரிசையாக நடத்தியுள்ளார்.
அப்போது தான் காஷ்மீர் சம்பவம் குறித்து அறிந்த அவர் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்.வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய அவர்,திருமணத்திற்கு பிறகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த விருந்தினை ரத்து செய்து அந்த தொகையினை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்.
வைர வியாபாரியின் செயல் பலரையும் நெகிழவைத்ததோடு,சமூகவலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.