தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீடு தொடரும்:உச்ச நீதிமன்றம்

Home > தமிழ் news
By |
தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீடு தொடரும்:உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடுகளைப் பொருத்தவரை தமிழக அரசிடம் ஒரு போதாமை தொடர்ந்து நீடித்துவருகிறது.   முன்னதாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர் உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 69% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனால் பொதுப் பிரிவினரைச் சேர்ந்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விழுக்காடு குறைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மனு அளித்திருந்தனர்.

 

பொதுவாக மேற்படிப்புகளுக்கான சேர்க்கையில், குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களும், சில காரணங்களுக்காக இட ஒதுக்கீட்டு சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களும்தான் பொதுப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறார்கள்.  எனினும் தனிப்பிரிவினர்களுக்கு மட்டுமே 69% ஒதுக்கியதால் சாதிப் பிரிவுகளை அடையாளமாக வைத்து கல்லூரிப் படிப்புகளில் சேர விரும்பாத மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கணிசமாக குறைந்திருப்பதாக அம்மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்திருந்தனர். 

 

அதன்படி, குறைந்த பட்சம் 50% இட ஒதுக்கீட்டையாவது பொதுப் பிரிவினர்களுக்குக் அந்த மனுவில் கோரியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்த, இந்த மனு ‘பொதுப் பிரிவினர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இம்முடிவு பொதுப் பிரிவினைத் தேர்வு செய்வதற்கு பதிலாக அடையாளப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கவே மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

MEDICALADMISSIONS, SUPREMECOURTVERDICT