கடந்த ஜனவரி 10-ம் தேதி காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது முஸ்லிம் பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் இந்த வழக்கில் தவறுதலாக இணைக்கப்பட்டு விட்டோம் என்று, குற்றவாளிகளில் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

அதே நேரம் இந்த வழக்கை அருகில் உள்ள சண்டிகர் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று, சிறுமியின் சார்பாக ஆஜராகும் வக்கீல் இந்திரா ஜெய்சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.எம்.சந்திரசூட் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்க நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

 

இதுகுறித்து தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா கூறுகையில், ''இந்த வழக்கு விசாரணையின் முக்கிய கவலையே நேர்மையாக நடக்குமா என்பதுதான்.பாதிக்கப் பட்டவர்களுக்கும், அவருக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது.

 

ஒருவேளை நீதிபரிபாலன முறையில் சிறுநேர்மை தவறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நினைத்து எங்களை அணுகினாலும் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

BY MANJULA | APR 26, 2018 4:12 PM #KATHUARAPECASE #JAMMUANDKASHMIR #SUPREMECOURT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS