3 மருந்துகளுக்கான தடையை மட்டும் நீக்கி, விற்பனைக்கு அனுமதி!

Home > தமிழ் news
By |
3 மருந்துகளுக்கான தடையை மட்டும் நீக்கி, விற்பனைக்கு அனுமதி!

அண்மையில் மத்திய அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சகம் செய்த ஆய்வுப் பரிசோதனையின் பேரில் ஏறத்தாழ 328 மருந்துகள் தடை செய்யப்பட்டன. அதில் சாரிடான் உட்பட 3 மருந்துகளும் தடை செய்யப்பட்ட முக்கியமான மருந்துகளாகும். இந்த நிலையில், அம்மருந்துகளை தற்காலிகத்துக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

 

பான்டர்ம், குளுக்கோனார்ம், லூபிட்டிக்ளோக்ஸ், டாக்சிம் ஏ ஸெட், சாரிடான் ஆகிய மருந்துகள் உடலுக்கு பாதிப்பையும் பக்க விளைவினையும் உண்டாக்குவதாக கூறப்பட்டதை அடுத்து, மேற்கண்ட மருந்துகளை தயாரித்து விநியோகிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இம்மாத்திரைகளை தொடர்ந்து விற்பனை செய்வதற்கு அனுமதி தந்துள்ளது.!

328DRUGSBANNED, INDIA, INDIAHEALTH, HEALTHMINISTRYINDIA, SARIDON, SUPREMECOURT