ரசிகர்களின் 'பேவரைட்' படத்தை கைப்பற்றிய சன் டிவி!
Home > தமிழ் news
இந்த வருடம் வெளியான படங்களில் மிகச்சிறந்த திரில்லர் படம் என்ற பெயர் இயக்குநர் ராம்குமார்-விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்துக்குக் கிடைத்துள்ளது. ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை இருந்ததாக படம் பார்த்தவர்கள் பலரும் பாராட்டி இருந்தனர்.
இந்தநிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் பெற்றுள்ளது.
தியேட்டர்களில் வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலே வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
SUNTV, RATSASAN, VISHNUVISHAL