ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் குவிந்தன.

 

இந்த நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும்,வன்முறை ஏற்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே,துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS