தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல நோய்கள் வருவதாகவும், தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மூட வலியுறுத்தியும்,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், கடந்த 24-ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே நடந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் சுமார் 20,000 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS