லேப்டாப்பை இழந்தவருக்கு, உருக்கமான கடிதம் எழுதி உலக ஃபேமஸ் ஆன திருடன்!
Home > தமிழ் newsஇங்கிலாந்தின் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வருபவர் ஸ்டீவ் வேலண்டைன். இவரது ஃபிளாட் மேட்டின், லேப்டாப் மிக அண்மையில் காணாமல் போனது. அதை யாரோ திருவிட்டதால், அவரது நண்பர் மிகவும் சோகமாக மனம் வெம்பி, யார் எடுத்திருக்கக் கூடும் என குழம்பிப்போய் இருந்துள்ளார். இவ்வாறு இருந்த அவரது நண்பருக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதனை ஸ்டீவ், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து, இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.
அந்த இ-மெயிலை அனுப்பியது, அந்த லேப்டாப் திருடன்’தான். அதில், ‘உங்கள் லேப்டாப்பை திருடிய திருடன் நான்தான். என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு இருந்த பணக்கஷ்டத்தால் உங்கள் மடிக்கணினியில் கை வைத்துவிட்டேன். ஏதோ ஒரு உறுத்தலால்தான் உங்கள் பர்ஸையும் உங்கள் போனையும் விட்டுவைத்துவிட்டு, லேப்டாப்பை மட்டும் திருடிக்கொண்டு வந்தேன்’ என்று கூறியுள்ளான்.
மேலும் அந்த திருடன், ‘உங்களது லேப்டாப் விபரங்களைப் பார்த்தால் நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பவர் போலவும், அதில் இருக்கும் சில புரோஜக்டுகளை பார்க்கும்போது அவை உங்களுக்கு தேவைப்படும் எனவும் தெரிகிறது. அப்படியானால் அவற்றை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன். மீண்டும் என் செயலுக்கு நான் வருந்துகிறேன்’ என்றும் கூறியிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் நகைப்புடன் பதிவு செய்திருக்கிறார் ஸ்டீவ்.
இதேபோல், முன்னதாக லாஸ் வேகாஸில், நபர் ஒருவரின் பர்ஸை திருடிய திருடன், ஒரு மன்னிப்பு கடிதத்துடன், தான் திருடிய பணத்தை விட சற்று அதிகமாக வைத்து திருப்பி அனுப்பியிருந்ததும் நெகிழவைத்த சம்பவமாக இணையத்தில் வைரலானது.
So my flat mates laptop got stolen today, please pree what the thief sent him 😂😂😂😂 pic.twitter.com/pDhhpmncPz
— Stevie Valentine (@StevieBlessed) November 28, 2018