Looks like you've blocked notifications!
கதறி அழுதார் ஸ்டீவ் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர், ஆகியோருக்கு விளையாட  ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், "நான் தான் அந்த போட்டியின் கேப்டனாக செயல்பட்டேன். தவறுக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.

 

நான் ஆஸ்திரேலியாவிற்கும், ரசிகர்களுக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் ஏற்படுத்திய வலிக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்", என்று கூறினார்.

 

மேலும் ஏற்கனவே சோர்வான நிலையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், பேட்டியின் இடையிலேயே கதறி அழ ஆரம்பித்தார்.

 


 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS