இப்படியா 'பௌலிங்' போடுறது?...பந்து தாக்கி கீழே விழுந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்,களத்துக்கு திரும்பும் நிலையில்,அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மிதிற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அவர் மீண்டும் களத்துக்கு திரும்பவுள்ள செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டிகளில் களமிறங்குவார் என கோமிலா விக்டோரியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
விக்டோரியன்ஸின் பயிற்சியாளர் முகமது சலாஹுதின் ஜனவரி மாதம் இரண்டாம் பாதியில் அணியில் இணைவார். முதல் 4 போட்டிகளில் அவர் இடம்பெற மாட்டர் என்று கூறியுள்ளார். முதல் நான்கு போட்டிகளில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் இடம்பெறுவார், அவருக்கு மாற்றாக இவர் அணியில் இடம்பெறுவார் என்றார்.
இந்நிலையில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.அதில், அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களான மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்று ஹேசில்வுட் ஆகியோர் ஸ்மித்துக்கு பந்துவீசுகின்றனர். அதில், ஹேசில்வுட் லெக்சைடில் வீசும் பந்தை எதிர்கொள்ள முயற்சி ஸ்மித் தடுமாறி கீழே விழுகிறார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.