ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் நேற்று துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகினர். தொடர்ந்து இன்றும் போலீஸ்-பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

இந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த போலீசாரை போராட்டக்காரர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

மற்றொரு இடத்தில் காயம்பட்டு தலையில் ரத்தம் வழிய மயங்கிக் கிடந்த காவலர் ஒருவரை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதேபோல போராட்டத்தில் சிக்கி மயக்க நிலைக்குச் சென்ற 5-க்கும் மேற்பட்ட பெண் காவலர்களை பத்திரமாக மீட்டு, அவர்களை ஒரு அறையில் ஓய்வெடுக்க வைத்து தண்ணீர் கொடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS