தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாள்களாக பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

 

இதனால் தூத்துக்குடி டி.ஐ.ஜி தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். எனினும் மக்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டதால் போலீசாரால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் பலனளிக்கவில்லை.

 

இதற்கிடையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே சென்றவர்கள் அங்கு நின்றிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

இதில் ஒரு பெண், 3 வாலிபர்கள் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS