புகைப்பட உதவி @ANI​

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தூத்துக்குடி பகுதியில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது.

 

இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சென்னை தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை.

 

இதனால் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காரணம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி தர்ணா செய்தனர். 

 

இதேபோல,தலைமை செயலகத்திற்கு வெளியே திமுகவினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து, ஸ்டாலினை குண்டுக்கட்டாக தலைமை செயலகத்தில் இருந்து போலீசார் வெளியே தூக்கி வந்தனர். 

 

பின்னர், வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.சிறிது நேரத்திற்கு பின்னர், போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS